Wednesday, June 04, 2008


வேதனை வேடிக்கை ஆவதென்ன?
வெக்கம் வேஷம் ஆனதென்ன?
வேல் பாயும் வேகத்தின் விலையென்ன?
விஞ்ஞானமே, பதில் சொல்வாயா?


Sunday, October 14, 2007

அகதிக்காற்று


தனிமை என்பதற்கு
பகல் என்ன? இரவென்ன?
தானியங்கி தலை தாங்கும்
தன்மானம் துணை என்ன?

தள்ளாடி தடுமாறி
துலைந்தும் போவதென்ன?
தோண்டி பாருமடி
தான் என்னும் தீ என்ன?


Monday, October 01, 2007

சந்தேக சாட்சிகள்

---------------------------------------------------------



இதை விட சாட்சிகள் வேறு வேணுமோ?
ஒன்றும் இல்லை இல்லை என்று
எடுத்துரைதீரே, அடுக்குமோ?
இத்தனை சந்தேகங்கள் தந்ததேனோ?

மனம் கொண்டேன், திருமணம் செய்தேன்
என்று, முந்தானை மடி மேல்
எடுதுரைதீரே, அடுக்குமோ?
இத்தனை பொய்கள் சொன்னதேனோ?

அவள்,

மையின் குறியும் கதைகள் சொல்லும்,
மஞ்சள் வாசம் பழியும் சொல்லும்,
இதற்குமேல் நான் ஏனோ? பாவம்
மதிகெட்டேன் எனை மறந்திடு போதும்!

இதை விட சாட்சிகள் வேறு வேணுமோ?
ஒன்றும் இல்லை இல்லை என்று
எடுத்துரைதீரே, அடுக்குமோ?
இத்தனை சந்தேகங்கள் தந்ததேனோ?

* inspired from one of the dance numbers I learnt recently.

Sunday, September 30, 2007



ஆத்திரம் பொங்குதடி, தோழி
என்னுள் ஆத்திரம் பொங்குதடி.

சாஸ்திரம் பேசுகிற
மூடர்கள் மத்தியில்
என் ஆணவம் பாயுதடி !

ஆத்திரம் சிரிக்குதடி,
வெறியுடன்; ஆத்திரம் சிரிக்குதடி.

காலங்கள் கடக்கின்ற,
என் காயங்கள் கால் அடியே
கத்தி கதறுதடி; தோழி!

ஆத்திரம் தூங்குதடி;
என்னோடு! அதுவும் இமை மூடுதடி!

Wednesday, August 15, 2007

ஊமை புலம்பல்


முகம் திரும்பும் நேரத்தில்
குரல் ஒன்று அழைத்தது.
சொல்ல வந்த வார்த்தைகள்;
மெய் மறந்து நின்றது.


ஊமை புலம்பலாம்!
இவள் உவமை சொல்கிறாள்!



Saturday, August 11, 2007

சுமைத்தாங்கி


நான் சுமக்த துணிந்தது
என் இழப்பு ஒன்றைத்தான்

ஐயோ!
இருக்கும் இடமெல்லாமும்
அது எடுத்துக்கொண்டதே!



Friday, August 10, 2007

விழித்திடு


இவ்வுலகம்;
இன்றிரவு விழிக்கட்டும்.
நான் தலை சாய்கிறேன்.



Monday, July 30, 2007

தாவணி கவிதைகள்


கூட்டு சோறு கட்டிக்கொண்டு
கையில் கூடை தூக்கிக்கொண்டு
யாரு இங்கே வந்தது?

ஒத்தை அடி பாதையிலே
ஓசை இல்லா நேரத்திலே
தாவணி தவழுது!

தாயகங்கள் தனிய,
திக்கி தடுமாறுது.

தென்ன மர தோப்புக்குள்ளே
நந்தவனம்; அது
தப்பி சென்ற வழி என
நம்பவேணும்.

அடி ஆத்தாடி,
மனம் காத்தாடி - போல

சுத்தி சுத்தி வந்த நேரம்
நல்ல நேரம் ஆனது.



Wednesday, July 25, 2007

bhibatsa

bhibatsa (disgust)

One of the Navarasa's in Dance. I perceive this as the most intense of many emotions.

Very often we come across situations where in goodness is overshadowed by dominance of mediocrity, irritably so. Our voices raise to fall upon deaf ears, or if you get a little lucky, they resonate in vacuum. I've heard the cry of many 'unknowns', seen the colours of their disgust, learnt that indifference is the only treatment meted out to them. 'bhibatsa' is an outpour of disgust, on anything or anyone remotely 'ugly' in form.

மூன்று கால் முயலொன்று கண்டேன்
அது, திக்கி திசைமாறி சாவிறுபதை கண்டேன்.

காப்பாற்ற துடித்ததென் நெஞ்சம், அப்போது
கை தட்டி கரம் கொட்டி சிரிப்பதன் சத்தம்.

* * *

ஷண்டாலன் பூமி இது;
சங்கே முழங்கு.
சாக்கடை நதி நடுவே - யாரோ?
சந்தண சிரங்கு !

Monday, July 16, 2007

தேடல்

வார்த்தைகள் இல்லையடா,
உனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லையடா.

இயற்கையின் தவறுகளுக்கு
மனசாட்சி இருந்தால்
அவை உன்னிடம் மட்டும் வந்து
மண்ணிப்பு கேட்கட்டும்.


அதுவரை வார்த்தைகள் இல்லையடா
உன்னிடம் சொல்ல வார்த்தைகள் இங்கில்லையடா

கண்ணிறுநதும் குருடனாய், காத்திருக்கையில்
கண்ணீரில் புன்னகையை கழித்துக்கொண்டாய்.

இருட்டிவிட்ட இதையத்தின் மறுபுறத்தில்,
ஆடம்பர ஆசைகளை புதைத்துக்கொண்டாய்.

வார்த்தைகள் இல்லையடா
உன்னிடம் சொல்ல வார்த்தைகள் இல்லையடா
நம் மௌனம் என்னை வதைக்குதே
அதை சொல்ல வார்த்தைகள் இல்லையடா!