கருவளையம்


இரவுகள் பகலாய் தினம் வேஷம் போட;
ஈரேழு ஜன்மங்கள் நான் நடித்த ஞாபகம்.
கணீர் கம்பளத்தில் கடைசுகம் தேட;
உப்பினால் காயங்கள், சுட்டேரிந்த சித்திரம்!



சாக்ஷி


முழித்திருந்தேன்.
காத்திருந்தேன்.
கார் மேகம் மௌனமாய் கடந்து செல்வதை பார்த்திருக்கேன்.

காகித பூக்களிலும்
அசையா காற்றினிலும் துணைகொண்டேன்.
நீ எங்கே போனாயடி?



முடிவுரை


இன்று போல் ஓர் இருண்ட இரவில்
இடுகாடின் தனிமை சூழ
தென்றல் எனை மெரட்டி செல்கையில்
ஞாபகங்கள் தாலாட்டுதே!



மிண்ணும் அழகே


மிண்ணும் அழகே, மெளிரும் பூவே
சீண்டி பார்க்கையில்
சுடும் நிலவே
கொஞ்ச கொஞ்சமாய், என் மனதுக்குள் நுழைந்தாயே..

வானவில்லின் குறை அறிந்தேன்
மழை தாளத்தின் பிழை புரிந்தே
கண் விழித்தேன், பதில் அறிந்தேனடி..

உன் அழகினிலே
உன் சிரிப்பிலே
பூமியினில் வரும் தேவதையே

உன்னை பார்க்கும் நேரங்களில்
மோகம் மனம் கவர
மண்ணில் வீழ்தேனடி


கல்வெட்டுகள்


பேசும் வார்த்தைகள் யாவும்
சிலந்தி வலை என சூழ
மூச்சு தெணர சிக்கின்கொண்ட
ரக்கை இல்லா குருவி போல்,

கண்ணீரும் கதறலுமாய்
தனியே தவிக்கும் எனக்கு
காலங்கள் மாறும் எனிலும்
வட்டமாய் விரைந்து வரும்,

என்பதே கல்வெட்டாய் பதிந்தது.